Post-1 THYANAM -A PRODIGY STARTING POINT OF PROSPECTIVE LIFE
தியானம் அலங்கார வார்த்தை இல்லை ஒரு அர்த்தமுள்ள தொடக்கம்
இந்த கட்டுரை ஒரு விதையை நோக்கிய பயணம் .பீஜம் என்றால் விதை என்று பொருள் .மங்கல வார்த்தையில் ஆரம்பித்து மந்திர வார்த்தைகள் வரை அத்தனையும் பீஜங்கள்.விதை இங்கு எப்படி இருக்கிறது , அமைதியாக ,மென்மையாக ,தனக்குள் மாபெரும் விருட்சத்தை ஒளித்துவைத்துக்கொண்டு எந்த ஒரு ஆற்பாட்டமும் இல்லாமல் சாந்தமாக இருப்பதுதான் அதன் ரகசியமோ . கடவுள் விதையை வைத்து என்ன சொல்லநினைக்கிறார் என்று ஊன்று கவனித்தால் அங்கு பொதிந்து இருப்பவைகள் தான் வாழ்க்கையின் ரகசியங்கள்,
ஒவ்வொரு மனி தனுக்குள்ளும் எத்தனை திறமைகள் ,அதை புரியவிடாமல் எது தடுக்கிறது.அதை மாயை என்று ஒதுக்கிவிடமுடியாது. ஏனென்றல் எல்லா சாவிகளையும் உள் வைத்தல்லவா இந்த வாழ்கை என்ற பெரும்பூட்டை உருவாக்கிவைத்து இருகிறார் .தேடவேண்டியது நாமல்லவா ,தேடாமல் இருப்பது தான் இங்கு வாழ்கையை முடக்கிப் போடும் சோம்பேறித்தனம் அதை புரிந்துகொண்டால் இந்த வாழ்கை புரிய ஆரம்பிக்கும் ,அந்த வானம் வசப்படும் .
சிறகுகளை விரிக்கும் வரையில் தன் சிறகுகள் கூட பாரம்தான் ,சிறகை விரிதுப்பார் வானம் தொடும் தூரம்தான்.சிறகுகள் இருப்பதே தெரியவில்லை என்றால் சிறகை விரித்தெங்கே பறப்பது எந்த பறவையும் தன குஞ்சுக்கு பறக்கக் கற்றுகொடுப்பதில்லை ஆனால் அதற்கான வாய்ப்பை உருவா வக்கிகொடுத்து தானே பறக்க பழகும் அனுபவத்தை தருகின்றது என்பது ஆச்சரியமான உண்மை .
வெளியில் உள்ளவைகளை நோக்கும் பயணம் வாழ கற்றுதருகின்றன , உள்ளே உள்ளவைகளை நோக்கும் பயணம் வாழ்க்கையை கற்றுத்தருகின்றது .புறக்கண்களால் பார்த்து புரிந்துகொள்ள முடிகின்ற விஷயங்கள் வாழ்கை நடைமுறைகளை கற்றுத்தருகின்றது .அகம் நோக்கிய விழிப்புணர்வு நம் சிறப்பியல்புகளை நமக்கு புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது.நமக்கு ஒரு பிரச்னை என்றதும் அதை மற்றவரிடம் ஓடிசென்று சொல்லி அதற்கான தீர்வை தேட முயற்சிக்கிறோம்.உங்கள் பிரச்சனைக்கு சரியான தீர்வை ,தெளிவை அடைய உங்களால் முடியும் .ஆரவரங்களை தவிர்த்து ஒரு நிமிட அமைதி அத்தனையும் சொல்லிகொடுத்துவிடும் .அந்த ஒருநிமிட சிந்தனையை அமைதியை எப்படி ஏற்படுத் திக்கொள்வது எப்படி அதுதான் பெரியவிஷயம் அதை பழக்கிக் கொண்டால் அதனையும் சாதித்துவிடலாம் .தொடர்ந்து பேசலாம் .
அன்புடன்
ஆருர் பி ச்சை இராஜசேகரன்